ஆட்சியமைத்து ஓராண்டு நிறைவு - அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மு.க.ஸ்டாலின் மரியாதை
திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியது. மே 7 ஆம் தேதி முதலமைச்சராக முதல்முறையாக மு,.க ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருடன் அமைச்சர்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இதனிடையே ஓராண்டு நிறைவையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்களான அறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர்.
ஆடைகளை களைத்து அடித்துக் கொல்லப்பட்ட சிறை அதிகாரி! நீர்கொழும்பு சம்பவத்தின் அதிர்ச்சி அறிக்கை IBC Tamil
சிறை காவலர்களின் தலைகள் மீது பெரிய கற்களால் தாக்கிய கைதிகள் : வெளிவரும் திடுக்கிடும் தகவல் IBC Tamil