பாக்யராஜ் உடலுக்கு முக ஸ்டாலின் அஞ்சலி

Bhagyaraj M K Stalin
By Fathima Jun 27, 2026 07:36 AM GMT
Report

சென்னை வள்ளுவர்கோட்டம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள பாக்யராஜ் உடலுக்கு திமுக தலைவரான முக ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

பாக்யராஜ் மனைவி, மகன், மகளுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

முக ஸ்டாலின் அவர்கள், ஆசான் மறைந்த சில வாரங்களில் அவரது மாணவரையும் திரையுலகம் இழந்துவிட்டது, இந்திய சினிமாவில் முடிசூடாத் திரைக்கதை மன்னராக அனைவரையும் ஈர்த்த யதார்த்த நாயகனாக சிக்கலான சூழலையும் சிறிய வசனத்தில் கடத்திவிடும் ஆற்றல் பெற்ற எழுத்தாளராக என எல்லாவற்றிலும் வெற்றி பெற்ற அசாத்திய இயக்குனராக வலம் வந்தவர் பாக்கியராஜ், தன்னைப் போலவே மேலும் பலரை இயக்குனர்களாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர். தமது படைப்புகளால் பாக்யராஜ் அவர்கள் என்றென்றும் தமிழ்நாட்டு மக்களின் பிரிக்க முடியாத அங்கமாக தொடர்ந்து வாழ்வார் என கூறியிருந்தார்.