மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம் - மு.க.ஸ்டாலின்
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருணாநிதியின் 103வது பிறந்தநாள்
முன்னாள் திமுக தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதியின் 103வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள கருணாநிதியின் நினைவிடத்தில், திமுக சார்பில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி, திமுக எம்.பி கனிமொழி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கருணாநிதியின் படத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தினார்.
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்
இதனையடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "தலைவரின் பிறந்தநாள்! தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
தலைவரின் பிறந்தநாள்!
— M.K.Stalin (@mkstalin) June 3, 2026
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத்… pic.twitter.com/VFLf6hK0PQ
உறுதியாய்ச் சொல்கிறோம். மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!" என தெரிவித்துள்ளார்.