கொரோனா தடுப்பு பணி: மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள முக்கியமான உத்தரவு

Corona Tamil Nadu Stalin
By mohanelango May 05, 2021 12:01 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாள்தோறும் 20,000-க்கும் அதிகமான பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. 

இந்நிலையில் நாளை முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின் பல்வேறு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “மருத்துவ அவசரநிலை அளவுக்கு #Covid19 தொற்றின் தீவிரம் இருப்பதால், உடனடியாகக் கட்டளை மையம் (War Room) ஒன்றை திறந்திட வேண்டும் என தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன்.

உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகளும் தம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.” என்றுள்ளார்.

மேலும், “தனியார் மருத்துவமனைகளில் 50% படுக்கைகளை ஒதுக்கீடு செய்து வருகிற நிலையில் கூடுதல் படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

கட்டணத்திலும் முடிந்த அளவு சலுகை காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன். ஏழை - எளிய மக்களுக்கு மிகுந்த கருணை காட்டி உயிரைச் செலவில்லாமல் மீட்டுத் தர வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.