வலிமை படத்தை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின்..இயக்குனர் விநோத்திடம் விசாரணை நடத்த உத்தரவு - காரணம் என்ன?

actorajithkumar mkstalinhvinoth cmwatchesvalimai stalinordersforprobe valimaimovie
By Swetha Subash Mar 30, 2022 02:21 PM GMT
Report

தமிழில் எச். விநோத் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்து கடந்த பிப்ரவரி 24-ந் தேதி பான் இந்தியா திரைப்படமாக வெளியானது வலிமை.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இந்த படத்தில் கார்த்திகேயா, ஹீமா குரேஷி, யோகி பாபு உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்திருந்தனர். போனி கபூர் படத்தை தயாரித்தார்.

வலிமை படத்தை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின்..இயக்குனர் விநோத்திடம் விசாரணை நடத்த உத்தரவு - காரணம் என்ன? | Mk Stalin Orders For Probe After Watching Valimai

படம் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. ஜீ5 ஓடிடி தளத்திலும் வலிமை படம் ஒளிப்பரப்பபட்டு அதிலும் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இத்திரைப்படம் சென்னையில் பைக் ரேஸ் கும்பலை சேர்ந்தவர்கள் நகை பறிப்பு, கொலை, போதைப் பொருள் கடத்தல் ஆகிய குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவது பற்றியும்,

இவர்கள் வேலையில்லாத இளைஞர்கள், மன அழுத்தத்தில் உள்ளவர்களை குறிவைத்து தங்கள் வலையில் சிக்க வைப்பது போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் இயக்குநர் வினோத்தும், செய்திதாள்களில் வந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து தான் இந்த கதையை உருவாக்கினேன் என்று கூறியிருந்தார்.

வலிமை படத்தை பார்த்த முதலமைச்சர் ஸ்டாலின்..இயக்குனர் விநோத்திடம் விசாரணை நடத்த உத்தரவு - காரணம் என்ன? | Mk Stalin Orders For Probe After Watching Valimai

இந்நிலையில் வலிமை திரைப்படத்தை பார்த்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குழுவிடம் எந்த உண்மை சம்பவத்தை ஆதாரமாக வைத்து இந்த கதையை வினோத் இயக்கினார். உண்மையிலேயே தமிழகத்தில் அப்படி ஏதாவது போதைப் பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் உள்ளதா என்று வினோத்திடம் விசாரிக்குமாறு கூறியிருக்கிறார்.

இயக்குனர் விநோத்திடம் இருந்தே விசாரணயை துவக்க முதலமைச்சர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இதனிடையே அண்மையில் தமிழகத்தில் போதைப் பொருள் உற்பத்தி, கடத்தல் போன்றவற்றை தடுக்க கஞ்சா வேட்டை 2.0 என்ற ஆப்ரேஷனை துவக்க தமிழக டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மார்ச் 28-ம் தேதி தொடங்கிய இந்த ஆப்ரேஷன், ஏப்ரல் 27-ம் தேதி வரை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.