‘’ அண்ணன் மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் ‘’ - சிறப்பு வீடியோ வெளியிட்ட எம்.பி. கனிமொழி

kanimozhi CMMKStalin HBDMKStalin
By Irumporai Mar 01, 2022 04:07 AM GMT
Report

 தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று தனது 69-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவருக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் கனிமொழி எம்.பி அவர்கள் சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், அவரது பதிவில்

பெரியார்- அண்ணா – கலைஞர்- உள்ளிட்ட முன்னோடிகள் விட்டுச் சென்ற சமூக நீதிப் பாதையில், கழகத்தையும் தமிழகத்தையும் வழிநடத்திச்செல்லும் தளபதி – அண்ணன் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள் என கூறியுள்ளார்.