நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவை கூட்டம்!
CM
MK Stalin
Tamilnadu
Ministers Meet
By Thahir
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடரின் முதல் நாளில் நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்வார்.
பட்ஜெட் கூட்டத்தொடருக்கு முன்பதாக அமைச்சரவை கூடி விவாதிப்பது வழக்கம். தமிழகத்தில் மக்கள் நலத் திட்டங்களுக்காக துறை வாரியாக அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள், அதற்கு ஆகும் செலவுகள் போன்றவை, அமைச்சரவை கூட்டத்தில் விரிவாக பேசப்படும்.
இந்த நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூட்டியுள்ளார். நாளை (புதன்கிழமை) காலை 10 மணியளவில் நாமக்கல் கவிஞர் மாளிகை 10-வது மாடியில் உள்ள கூட்ட அரங்கில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.