முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

dmkmlameeting annaarivalayam dmkpartymeeting
By Swetha Subash Mar 18, 2022 02:24 PM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இன்று காலை தமிழக சட்டப்பேரவையில் 2022-23-ம் ஆண்டுக்கான முழுமையான பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து தற்போது எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், இந்த கூட்டத்தில் பட்ஜெட் தொடரில் திமுக எம்.எல்.ஏக்கள் எப்படி செய்யப்பட வேண்டும் என்பது குறித்தும்

எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு துறைசார்ந்த அமைச்சர்கள் எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பது குறித்தும் ஆலோசனை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது, தொகுதி சார்ந்த வளர்ச்சி பணிகளின் நிலை குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.