தமிழக ஆளுநரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளதாக தகவல்

mkstalin rnravi tngovernor stalinmeetsgovernor
By Swetha Subash Mar 15, 2022 06:09 AM GMT
Report

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை இன்று சந்தித்து பேசவுள்ளார்.

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதியம் 12 மணியளவில் கிண்டியில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என். ரவியை சந்திக்கிறார்.

தமிழக ஆளுநரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்திக்க உள்ளதாக தகவல் | Mk Stalin Meets Governor Rn Ravi Ahead Of Budget

அப்போது நீட் தேர்வு விலக்கு தீர்மானம் நிறைவேற்றியது குறித்தும், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்தும் முதலமைச்சர் ஆளுநருடன் பேச வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேலும் முதலமைச்சருடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்களும் செல்லவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக அரசின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை வரும் 18-ம் தேதி சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்ய உள்ள நிலையில்,

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து பேசவிருப்பது குறிப்பிடத்தக்கது.