அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஆலோசனை
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நேற்று நடந்து முடிந்துள்ள நிலையில் மே 4 தேதி முடிவுகள் வெளியாகும்.
இந்த முறை தேர்தலில் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது, ஆனால் வாக்கு எண்ணிக்கையில் பெரியளவில் மாற்றம் ஏதும் இல்லை என கூறப்படுகிறது.
இன்று அண்ணா அறிவாலயம் வந்த முதலமைச்சர் முக ஸ்டாலின் வருகை தந்தார், அங்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட திமுக வேட்பாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிகிறது.

குறித்த மாவட்டங்களில் திமுக-வின் வெற்றி வாய்ப்பு, வாக்குபதிவு குறித்து கேட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் வாக்கு எண்ணிக்கை நாளன்று பின்தொடர வேண்டிய நடைமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கியதாகவும் தொடர்ந்து மற்ற மாவட்டங்களை சேர்ந்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
