டெல்லியில் முக்கிய பிரதிநிதிகளை சந்தித்த மு.க.ஸ்டாலின்
டெல்லியில் பிரதமர் மோடியை அவரது இல்லத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து முக்கிய அம்சங்கள் குறித்து உரையாற்றினார்.
தமிழக முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற முன்னர் முதல் முறையாக இன்று டெல்லி சென்றுள்ளார். மாலையில் பிரதமர் மோடியை சந்தித்த அவர் 30க்கும் மேற்பட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார்.
இதனையடுத்து மு.க. ஸ்டாலினை டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் எச்சூரி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராஜா ஆகியோர் சந்தித்து பேசினார்கள்.
அதேபோல் மத்திய அரசின் பணியில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐஏஎஸ், ஐபிஎஸ், வனத்துறை அலுவலர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து உரையாற்றினார்கள்.