திமுகவின் குரலை கேட்டால் பாஜக நடுங்குகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

M K Stalin Tamil nadu DMK
By Karthick Aug 10, 2023 09:26 AM GMT
Report

இன்று கட்சி தொண்டர்களுக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழாவை மாவட்டக் கழகங்கள் – அணிகள் இணைந்து கொண்டாடுவீர் என குறிப்பிட்டுள்ளார்.

முக ஸ்டாலின் கடிதம்

தமிழக முதல்வரும், திமுகவின் தலைவருமான முக ஸ்டாலின், திமுக தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கடந்த 7-ஆம் தேதி கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, நடத்தப்பட்ட அமைதி பேரணி குறித்து விவரித்துள்ளார்.

mk-stalin-letter-to-party-workers

அந்த கடிதத்தில், இந்தியாவின் தலைநகரிலும் பிற மாநிலங்களிலும் நம் தலைவர் கருணாநிதியால் கட்டிக்காக்கப்பட்ட திமுகவின் பெயரைக் கேட்டால் அரசியல் எதிரிகள் அலறுகிறார்கள். நாட்டின் பிரதமர் மத்திய பிரதேசம் மற்றும் அந்தமான் நிகோபர் நிகழ்ச்சிகளில் திமுக மீது தேவையின்றி விமர்சனம் வைக்கின்றார்.  

பாஜக நடுங்குகிறது

mk-stalin-letter-to-party-workers

ராகுல் காந்தியின் கேள்விக்கு பதிலளிக்க முடியாத ஸ்மிரிதி இரானி, தன் பேச்சில் திமுக மீது அவதூறு சுமத்தி, திசை திருப்பும் வேலையைச் செய்ய நினைத்தார்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் திமுகவினரின் குரலைக் கேட்டால், பா.ஜ.க அரசு நடுங்குகிறது. அந்த நடுக்கம், அவர்களின் கட்சி நிகழ்வுகளிலும் எதிரொலிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.