முக ஸ்டாலின் பிரதமர் வேட்பாளரா...ஒரு கை பார்க்கலாம்..! அன்பில் மகேஷ் வேண்டுகோள்
சேலத்தில் நடைபெற்று வரும் திமுக இளைஞர் அணி 2-வந்து மாநில மாநாட்டில் அமைச்சர் அன்பில் மகேஷ் சிறப்புரையாற்றினார்.
மாநில மாநாடு
திமுகவின் இளைஞர் அணியின் 2-வது மாநில மாநாடு சேலம் ஆத்தூரை அடுத்த பெத்தநாயக்கன்பாளையத்தில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றுது.
காலை பேசிய தமிழக விளையாட்டு துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், ஆளுநரை நிரந்தரமாக நீக்குவது, நீட் தேர்வு விலக்கு பெரும் வரை போராட்டம் போன்ற 25 தீர்மானங்களை குறிப்பிட்டார்.
பிரதமர் வேட்பாளர்
இந்த மாநாட்டில் உரையாற்றிய தமிழ்நாடு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் என்ற பார்வை நமது தலைவர் பக்கம் திரும்பியுள்ளது என்று குறிப்பிட்டார்.
அவ்வாறு பிரதமர் வேட்பாளர் வாய்ப்பு கிடைத்தால் தட்டி கழிக்க வேண்டாம் என முதலமைச்சர் முக ஸ்டாலினிடம் கேட்டுக்கொண்ட அவர், வாய்ப்பு கிடைத்தால் அதையும் ஒரு கை பார்க்கலாம் என்று கூற அரங்கத்தில் இருந்து பலரும் கூச்சலிட்டனர்.