சூறாவளியாய் சுழலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் - இன்று டெல்டா மாவட்டங்களுக்கு பயணம்
கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார்.
காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடந்த வாரம் முழுவதும் சென்னை கனமழையின் வசம் சிக்கி கொண்டது.. ஏராளமானோர் மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அவதிக்கு உள்ளாகினர். இதையடுத்து மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரடியாக சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தொடர்ந்து 5 நாட்களுக்கும் இந்த ஆய்வை நேரடியாகவே மேற்கொண்டு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கினார்.
இந்த நிலையில் கனமழையால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதன்படி புதுச்சேரியில் இருந்து புறப்பட்டு டெல்டா மாவட்டங்களான கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் கனமழையினால் பாதிக்கப்பட்ட பயிர் சேதங்களை பார்வையிடுகிறார்.