புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின்

Vijay M K Stalin
By Karthikraja Apr 20, 2026 03:43 PM GMT
Report

எங்கோ இருந்து வந்து, புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் என முதல்வர் மு.க.ஸ்டாலின் விஜய்யை மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.

பெரம்பூரில் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வட சென்னை தொகுதியில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

பெரம்பூர் தொகுதியில், தவெக தலைவர் விஜய் போட்டியிடுவதால் பெரம்பூர் நட்சத்திர தொகுதியாக மாறியுள்ளது. 

புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் | Mk Stalin Indirectly Criticize Vijay In Perambur

பெரம்பூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் ஆர்.டி.சேகருக்காக பிரச்சாரம் மேற்கொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின், மறைமுகமாக விஜயை விமர்சித்துள்ளார்.

புதிதாக அரசியலுக்கு வந்து..

இதில் பேசிய அவர், "இந்தியாவில் டெல்லி, மும்பை என எத்தனையோ மாநகராட்சிகள் உள்ளது. ஆனால் எங்கேயும் மாநகராட்சி சார்பில் பாலங்கள் காட்டியதில்லை.

ஆனால் சென்னையில் நான் மேயராக இருந்த போது 10பாலங்களை கட்டிய பெருமை எனக்கு உண்டு. அதனால் தான் போக்குவரத்து ஓரளவுக்கு சிறப்பாக உள்ளது.

புதிதாக அரசியலுக்கு வந்து நாடகத்தை நடிச்சுட்டு இருப்பவர் - விஜய்யை மறைமுகமாக தாக்கிய ஸ்டாலின் | Mk Stalin Indirectly Criticize Vijay In Perambur

நான் முதல்வராக வந்த பிறகு மாநகராட்சி சார்பில் 19 பாலங்கள் கட்டியுள்ளோம். மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வந்துள்ளோம். இதையெல்லாம் செய்திருக்கிறோம், அந்த உரிமையோடு உங்களிடம் வந்துள்ளேன்.

உங்களோடு இருந்து, உங்களுக்காக, உங்கள் வீட்டு ஊழியனாக பணியாற்றுபவர் வேண்டுமா? அல்லது எங்கோ இருந்து வந்து, புதிதாக அரசியலுக்கு வந்து, அப்படிப்பட்ட நாடகத்தை நடிச்சுக்கிட்டு இருப்பவர் வேண்டுமா? என்பதை கேட்கிறேன்.

நான் யாரையும் தாக்கி பேசவில்லை. எனக்கு யாரையும் தரக்குறைவாக பேசும் வழக்கம் இல்லை" என கூறியுள்ளார்.