இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் தான் : முதலமைச்சர் ஸ்டாலின்
இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் என முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்று 2 ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞ நினைவிடங்களில் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
விமர்சனம் குறித்து கவலையில்லை
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் : விமர்சனங்கள் பற்றி இம்மியளவும் கவலைப்படவில்லை என கூறினார். மேலும் இப்படிபட்ட ஆட்சிக்கு ஓட்டு போடவில்லையே என வருந்தும் அளவுக்கு ஆட்சி நடத்துவேன் என உறுதி கூறியிருந்தேன்.
இந்த ஆட்சி வாக்களித்தவர்களுக்கு மட்டும் அல்ல, வாக்களிக்காதவர்களுக்கும் சேர்த்துதான் எனக் கூறிய முதலமைச்சர் ஸ்டாலின்
கடந்த 2 ஆண்டுகள் எனக்கு ஒத்துழைப்பு அளித்தது போல தொடர்ந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனகூறியுள்ளார்