Saturday, Jul 12, 2025

உத்தரவை மீறி செயல்பட்ட திமுகவினர் : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆலோசனை

mkstalinmeeting dmkcandidatesissue
By Swetha Subash 3 years ago
Report

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திடீர் ஆலோசனை.

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் பதவிவேற்ற நிலையில்,

இன்று மாநகராட்சி,நகராட்சி,பேரூராட்சி உள்ளிட்ட மேயர்,நகர் மன்ற தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நடைபெற்றது.

இந்த மறைமுக தேர்தலில் பல்வேறு இடங்களிலும் திமுக வெற்றி பெற்றது.

இந்நிலையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ்,விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றிப்பெற்றுள்ளனர்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

அதிகாரப்பூர்வ வேட்பாளரை எதிர்த்து போட்டி வேட்பாளர் மனுதாக்கல் செய்ததற்கு எதிர்ப்பு கிளம்பியதால் பூந்தமல்லியில் திமுகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டு

நகராட்சி தலைவர் தேர்தல் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டு, வாக்கு பதிவு பாதியிலேயே நிறுத்தபட்டது.

அதேபோல் பல இடங்களில் கூட்டணி கட்சிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கும் போட்டி வேட்பாளர்களுக்கும் இடையே மோதல் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் உத்தரவை மீறிய திமுகவினரின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.