கெத்து காட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்: சைகை காட்டிய வீடியோ வைரல்
திமுக- காங்கிரஸ் இடையிலான தொகுதி பங்கீடு விவகாரம் நீண்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவுக்கு வந்துள்ளது.
ஆட்சியில் பங்கு, கூடுதல் தொகுதிகள், உள்ளாட்சியில் அதிகாரப் பகிர்வு போன்ற கோரிக்கைகளை முன்வைத்து காங்கிரஸ் தரப்பு திமுக தலைமையிடம் அழுத்தம் கொடுத்ததால் சில நாட்கள் இழுபறி நிலை நீடித்தது.
இறுதியாக காங்கிரஸ் கட்சிக்கு 28 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் இருந்து முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று இரவு வெளியேறினார்.
அப்போது செய்தியாளர்களை பார்த்து ஸ்டாலின் முடிந்துவிட்டது என்று கைகாட்டிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#WATCH | Tamil Nadu CM MK Stalin leaves from DMK HQ in Chennai after meeting with the Congress party over seat sharing for the upcoming assembly elections. pic.twitter.com/VIzthfu9pw
— ANI (@ANI) March 4, 2026
இதற்கு விளக்கமளித்த ஸ்டாலின், "ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு காரில் ஏறும்போது கைகாட்டி சைகை செய்திருப்பேன், இது திட்டமிட்டு செய்தது அல்ல.
காரில் ஏறும்போது எதிரில் நின்ற பத்திரிகையாளர் ஒருவர் முடிந்துவிட்டதா? என கேள்வி கேட்கவே நான் முடிந்துவிட்டது என்று பதிலளித்தேன்" என்று விளக்கமளித்துள்ளார்.