‘‘பிரதமர் மோடி நீங்க நல்லா இருக்கணும்’’ : முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

birthday mkstalin pmmodi
By Irumporai Sep 17, 2021 07:47 AM GMT
Report

பிரதமர் நரேந்திர மோடியின் 71-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு,முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் 71-ஆவது பிறந்தநாளான அவரது பிறந்தநாள் இன்று, பாஜகவினரால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

குறிப்பாக, அரசியல் மற்றும் திரைப்பிரபலங்கள்,கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் பிரதமருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,பிரதமர் மோடி அவர்களுக்கு,தமிழக முதல்வர் ஸ்டாலின் டிவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர்  கூறியதாவது:"நமது மாண்புமிகு பிரதமர் திரு அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.பிரதமர் மோடி அவர்கள் நீண்ட ஆயுள் மற்றும் ஆரோக்கியத்துடன் வாழ வாழ்த்துகிறேன்",என்று தெரிவித்துள்ளார்.