முதல்வர் ஸ்டாலினிடம் வைரல் சைகையை கேட்ட சுற்றுலாப் பயணிகள்

M K Stalin
By Yashini Apr 26, 2026 10:22 AM GMT
Report

தமிழக சட்டமன்ற தேர்தல் கடந்த வியாழக்கிழமை முடிந்த நிலையில், முதல்வர் மு. க ஸ்டாலின் ஓய்வெடுக்க தனது குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றார்.

அங்கு அவரை கண்ட சுற்றுலாப் பயணிகள் முதல்வர் ஸ்டாலினுடன் உரையாடி, புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

அப்போது, அவரது பிரபலமான வைரல் சைகையை மீண்டும் செய்யச் சொல்லி மகிழ்ந்தனர்.

முதல்வர் ஸ்டாலினிடம் வைரல் சைகையை கேட்ட சுற்றுலாப் பயணிகள் | Mk Stalin Finished Gesture Goes Viral

முன்னதாக, காங்கிரஸுடன் தொகுதி பங்கீடு முடிந்தபோது அவர் காட்டிய அந்த சைகை சமூக வலைதளங்களில் வைரலாகி, ஐகானிக் சைகையாக மாறியது.

இந்நிலையில், முதலமைச்சரின் வருகையையொட்டி கொடைக்கானலில் இரட்டை அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 4 நாட்கள் ஓய்வுக்குப் பிறகு அவர் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளார்.