கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ மீது வழக்குப்பதிவு - கைது செய்ய வலுக்கும் கோரிக்கை
mk stalin, eps urge to arrest kallakurichi tvk mla: தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார் அளித்துள்ள நிலையில், அவரை கைது செய்ய வேண்டுமென அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் புகார்
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு, கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்ததது.

அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை, அது குறித்து மாவட்ட ஆட்சியர் புகார் அளிக்கவில்லை, புகார் அளித்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தவெக அமைச்சர்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், கள்ளகுறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது மாவட்ட ஆட்சியர் எஸ்.பி.யிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில், தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மீது முதல் தகவல் அறிக்கை (FIR) பதியப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை கைது செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பச்சை அயோக்கியத்தனம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பதிவில், "ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.
மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர்.
ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா?
அதிமுக சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது.
அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது
ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்?
All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்?
அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்?
இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் முதலமைச்சர்?
“நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற விஜய்யின் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.
தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. விஜய் அவர்கள்.
இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!
ஆபாசக் குறுஞ்செய்தி அனுப்பிய கள்ளக்குறிச்சி தவெக MLA மீதான புகாரை மாவட்ட ஆட்சியர் அனுப்பிவிட்டதாக செய்திகள் வந்துள்ளன. மாற்றிப் பேசி, உயர்நீதிமன்றத்திலேயே மறுத்த அரசு, தலைமைச் செயலகத்திலேயே மறுத்து பேட்டி கொடுத்த அமைச்சர், “MLA பாவம்” என்று முட்டுகொடுத்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர், என வெளியில் தெரிந்தே இத்தனை அழுத்தங்கள், இத்தனைக்கும் நடுவே திடமாக நின்று தனக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுமைக்கு எதிரானப் திட மனதுடன் புகாரைப் பதிவு செய்துள்ளார், கள்ளக்குறிச்சி பெண் மாவட்ட ஆட்சித்தலைவர். ஒரு மாவட்டத்தின் District Magistrate-ஆன மாவட்ட பெண் ஆட்சியருக்கே இழைக்கப்பட்ட இந்த பெரும் கொடுமையை மறைக்க எத்தனை பொய்கள்? எவ்வளவு உருட்டுகள்? இது பச்சை அயோக்கியத்தனம் இல்லையா? @AIADMKOfficial சார்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, ஆட்சியரிடம் கேட்டு Affidavit தாக்கல் செய்யுங்கள் என்று உயர்நீதிமன்றம் கண்டிப்பாக இந்த அரசுக்கு உத்தரவிட்ட பிறகு, இப்போது புகார் அளிக்கப்பட்ட செய்தி வருகிறது. அப்படி என்றால், இத்தனைக் காலமும் இந்த விவகாரத்தை மூடி மறைக்க இந்த ஆச்சரியக்குறி அரசின் முதல்வரும் ,அதன் அமைச்சர்களும் கூட்டாக இணைந்து Conspire செய்துள்ளார்கள் என்ற முடிவுக்கு தான் வர முடிகிறது ஒரு பெண்ணுக்கு, அதுவும் ஒரு மாவட்ட ஆட்சியருக்கே பணிச்சூழலில் பாதுகாப்பு இல்லை என்பது மாநிலத்திற்கே எவ்வளவு பெரிய அசிங்கம்? All India Services அதிகாரிகளுக்கு பொறுப்பு அமைச்சர் முதலமைச்சர் தான். அப்படி என்றால், அவர்கள் உங்களை நம்பித் தான் பணியாற்றி வருகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. ஆனால், அந்த முதல்வரின் அமைச்சர்களும், அரசுமே இப்படி ஒரு மூடி மறைக்கும் கேவலத்தை செய்திருப்பது, அந்த பெண் ஆட்சியரின் மனதை எவ்வளவு காயப்படுத்தி இருக்கும்? அதேபோல், இப்படி கலெக்டருக்கே ஆபாச செய்தி அனுப்பலாம் என்ற எண்ணம் இந்த MLA-வுக்கு எங்கிருந்து வந்தது? நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், நம்மைக் காப்பாற்ற இந்த அரசும், முதல்வரும் இருக்கிறார்கள் என்ற மனநிலை தானே இது? மற்ற பாலியல் வழக்குகளை மறைக்க முயன்ற அதிகாரிகளுக்கும், உயர்நீதிமன்றத்திலேயே இப்படி ஒரு விவகாரம் நடந்ததை மறுத்து, இந்த வழக்கை இழுத்து மூட முயற்சித்த இந்த ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? இப்படி ஒரு வெட்கக்கேடான அரசாங்கத்தை வரலாறு பார்த்தது உண்டா? ஒரு மாவட்ட ஆட்சியருக்கு நேர்ந்த கொடுமையையே ஒட்டுமொத்தமாக மறைக்க முயன்ற நீங்கள், எந்த லட்சணத்தில் தமிழகப் பெண்களைக் காப்பீர்கள் @CMOTamilNadu? “நான் தான் தாய்மாமன். நான் தான் அண்ணன். பெண்கள் பாதுகாப்பு அண்ணனின் Guarantee” என்றெல்லாம் டயலாக் பேசி, சிங்கப்பெண் அதிரடிப் படை என்றெல்லாம் சொல்லி இத்தனை நாளும் கட்டமைக்க முயன்ற @actorvijay -இன் போலி பிம்பங்கள், அவர் கட்சி MLA-வினாலேயே சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது. தவெக அரசு அரங்கேற்றியுள்ள இந்த அசிங்கத்தால் முதலமைச்சர் என்ற உயர்ந்த பொறுப்புக்கான குறைந்தபட்ச தார்மீகத்தையும் இழந்துவிட்டார் திரு. @actorvijay அவர்கள். இன்றைய தினமே வழக்கு பதியப்பட்டு, இன்றைய தினமே கள்ளக்குறிச்சி தவெக MLA கைது செய்யப்பட வேண்டும்! இந்த அரசின் மீது நம்பிக்கை முழுவதுமாக போய்விட்டதால், இந்த வழக்கை CBI விசாரிக்க வேண்டும்; MLA-வோடு சேர்த்து இதை மறைக்க முயன்ற அத்தனை Powercenter-கள் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட @AIADMKOfficial துணை நிற்கும்!
— Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK (@EPSTamilNadu) November 24, 2026
மாவட்ட ஆட்சியருக்கு எதிராக இழைக்கப்பட்ட அனைத்து அநீதிகளும் களையப்பட, நீதி நிலைநாட்டப்பட வேண்டும்! எப்படி போராட்டம் நடத்தி, வழக்கு தொடர்ந்து இந்த விவகாரத்தில் உண்மை வெளிவர துணை நின்றோமோ, அதேபோல் நீதி நிலைநாட்டப்பட அதிமுக துணை நிற்கும்!" என தெரிவித்துள்ளார்.
கேவலத்தின் உச்சம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், "ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது.
இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும்.
தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும்.
ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன.
ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது.
இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம்.
பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது.
ஆளுங்கட்சியைச் சேர்ந்த MLA-வின் ஒழுங்கீனமான செயல் குறித்து மாவட்ட ஆட்சியர் முறையாகப் புகார் அளித்திருக்கும் செய்தி 'தி இந்து' நாளேட்டில் இன்று வெளியாகியிருக்கிறது. இத்தகைய ஒரு சம்பவம் நடைபெற்றதாக பல வாரங்களுக்கு முன்பு செய்திகள் வெளிவரத் தொடங்கியபோதே, முதலமைச்சரும் தலைமைச் செயலாளரும் மாவட்ட ஆட்சியரை அழைத்துப் பேசி இருக்க வேண்டும். அவருக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்ற நம்பிக்கையை அளித்திருக்க வேண்டும். தவறிழைத்த சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்து, சட்டநடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பெண்களின் பாதுகாப்பிற்கும், ஆட்சி மாண்பிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் எந்த ஒரு அரசும் இதைத்தான் செய்திருக்கும். ஆனால், தன் கட்சி சட்டமன்ற உறுப்பினரையும் தன் மைனாரிட்டி அரசையும் காப்பாற்றினால் போதும் என்ற நோக்கத்தில் இவர்கள் இந்த சம்பவத்தை மறைக்க அனைத்து வகைகளிலும் முயற்சித்ததால்தான், பாதிக்கப்பட்ட பெண் அலுவலர் முறையாகப் புகார் அளிக்கவே இத்தனை நாட்கள் ஆகியிருக்கின்றன. ஒரு மாவட்ட ஆட்சியருக்கே இந்த நிலைமை என்றால் தமிழ்நாட்டில் வாழும் சராசரிப் பெண்களின் நிலை எப்படி இருக்கும் என்ற கேள்வி கவலை அளிக்கிறது. இதில், பதவிக்கு மாரடிக்கும் சில கட்சித் தலைவர்கள் பாதிக்கப்பட்டவரின் பக்கம் நிற்காமல், MLA பாவம் என்று முட்டு கொடுத்தது கேவலத்தின் உச்சம். பல்வேறு வகைகளிலும் இந்த சம்பவம் அரசின் கவனத்திற்கு வந்த பிறகும், இந்த அரசு நடவடிக்கை எடுக்காமல் நீதிமன்றத்திலும் பொய் சொல்கிறார்கள் என்பது கடும் கண்டனத்துக்குரியது. பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது. இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்.
— M.K.Stalin (@mkstalin) November 24, 2026
பாலியல் குற்றங்களிலும், போதைப் பொருள் கடத்தலிலும், கொள்ளைச் சம்பவங்களிலும் த.வெ.க.வினர்தான் அதிகம் ஈடுபடுகிறார்கள் என நாங்கள் தொடர்ந்து சொல்லி வருவது ஒவ்வொரு நாளும் உண்மையாகி வருகிறது.
இனியும் தாமதிக்காமல், கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரைக் கைது செய்து விசாரிக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.