16-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசாரம் செய்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

campaign tamilnadu mkstalin localbodyelections
By Swetha Subash Feb 13, 2022 06:28 AM GMT
Report

வரும் 19-ம் தேதி தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.

அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கட்சியின் சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து காணொலி காட்சி மூலமாக கடந்த 6-ந்தேதி முதல்

கோவை, சேலம், கடலூர், தூத்துக்குடி, ஈரோடு, குமரி ஆகிய மாவட்டங்களில் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில், திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரம் செய்தார்.

இந்த பிரச்சாரத்தை பொதுமக்கள் நேரடியாக காணும் வகையில் 102 இடங்களில் பிரமாண்ட டிஜிட்டல் திரைகள் அமைக்கப்பட்டிருந்தது.

மேலும், ஞாயிற்றுக்கிழமையான இன்று திண்டுக்கல் மாவட்டத்தில் காணொலி வாயிலாக மு.க.ஸ்டாலின் பேசுகிறார்.

14-ந் தேதி மதுரை மாவட்டம், 15-ந்தேதி தஞ்சை மாவட்டத்தில் பிரசாரம் செய்ய உள்ளார்.

அதற்கு பிறகு முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் 16-ந்தேதி திருவள்ளூர் மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.