திமுக சட்டமன்ற குழு தலைவரானார் மு.க.ஸ்டாலின்: ஆட்சி அமைக்க இன்று உரிமை கோருகிறார்
தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில் உதயசூரியன் சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மொத்தம் 133 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ஸ்டாலின் திமுக சட்டமன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் ஸ்டாலின்.
மே.7 அன்று கவர்னர் மாளிகையில் காலை 10 மணிக்கு முதல்வராகப் பதவியேற்கிறார். பதவியேற்பு விழாவில் ஒவ்வொரு அமைச்சருக்கும் 5 முதல் 8 பாஸ்கள் மட்டுமே வழங்கப்படும். மொத்தம் 200 பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனத் தெரிகிறது.