’முதலமைச்சர் ஆனார் மு.க.ஸ்டாலின்” அடுத்து எங்கெங்கு செல்ல இருக்கிறார்?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றார்.
ஸ்டாலின் உடன் அமைச்சரவையில் இடம்பெறும் 34 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு இன்று பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன.
ஆளுநர் மாளிகையைத் தொடர்ந்து ஸ்டாலின் கலைஞர் நினைவிடம் செல்கிறார். அதோடு பெரியார் திடல், பேராசிரியர் அன்பழகன் இல்லம், கருணாநிதி அவர்களின் கோபாலபுரம் இல்லம் மற்றும் கனிமொழி வசிக்கும் .சி.ஐ.டி நகர் இல்லத்திற்கும் செல்ல இருக்கிறார்.
அதன் பிறகு தலைமைச்செயலகம் செல்லும் ஸ்டாலின் தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன.
அதன் பிறகு மாவட்ட ஆட்சியர்களுடன் ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட இருக்கின்றன. தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டு முக்கியமான முடிவு எடுக்கப்பட இருக்கிறது.