6-வது முறையாக ஸ்டாலின் அமைச்சரவை மாற்றம் - யார் யாருக்கு வாய்ப்பு?
தமிழக அமைச்சரவை மாற்றப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அமைச்சரவை மாற்றம்?
செந்தில் பாலாஜிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக் கோரி சென்னையைச் சேர்ந்த வித்யா குமார் மற்றும் அமலாக்கத் துறையினர் மனுதாக்கல் செய்தனர்.
இதனை விசாரித்த உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு அமைச்சர் பதவி வேண்டுமா அல்லது ஜாமீன் வேண்டுமா என்று கேள்வி எழுப்பியுள்ளது. தொடர்ந்து செந்தில் பாலாஜி பதவி விலகும் நிலைப்பாட்டை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஆறாவது முறையாக முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவை மாறவுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு காலமே உள்ள நிலையில் தற்போது மேற்கொள்ள உள்ள அமைச்சரவை மாற்றம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
யாருக்கு வாய்ப்பு?
அதன்படி செந்தில் பாலாஜி, பொன்முடி, ராணிப்பேட்டை காந்தி, கயல்விழி செல்வராஜ் ஆகிய நால்வர் நீக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதற்குப் பதிலாக மனோ தங்கராஜ், உதயசூரியன், மொஞ்சனூர் இளங்கோ, தமிழரசி, தளபதி ஆகியோரில் நால்வருக்கு அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்படலாம்.
மனோ தங்கராஜ் கிறிஸ்தவர். கன்னியாகுமரி மாவட்டத்தில் சிறுபான்மையினர் வாக்குகள் ஒருங்கிணைக்க வாய்ப்பு இருக்கும். விஜய்க்கு சிறுபான்மை வாக்கு திரும்புவதை தடுக்க உதவும்.
உதயசூரியன் 1989ல் முதன்முறையாக சட்டப்பேரவை உறுப்பினர் ஆனவர் மூத்த உறுப்பினர் என்பதால் அமைச்சராக வாய்ப்பிருக்கிறது.
மொஞ்சனூர் இளங்கோ செந்தில் பாலாஜி ராஜினாமா செய்வதால் அதே சமூகத்தைச் சேர்ந்த இளங்கோவிற்கு அமைச்சராக வாய்ப்பிருக்கிறது.
தமிழரசி கயல்விழி செல்வராஜ் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டால் அவருடைய இடத்திற்கு தமிழரசி நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது.
தளபதி ராணிப்பேட்டை காந்தி இடத்தில் இவர் நியமிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. மதுரையில் உட்கட்சிக் குழப்பங்களை தவிர்க்கப் பார்க்கலாம்.
மேலும், மா.சுப்ரமணியன், பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இலாகா மாற்றப்பட வாய்ப்பிருக்கிறது.