ஊட்டியில் நடனமாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - வைரல் வீடியோவால் பொதுமக்கள் மகிழ்ச்சி

M K Stalin Governor of Tamil Nadu
By Petchi Avudaiappan May 19, 2022 05:16 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in தமிழ்நாடு
Report

ஊட்டியில் தோடர் பழங்குடியினருடன் இணைந்து தமிழக முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

உதகமண்டலத்தில் நாளை 124வது மலர் கண்காட்சி மற்றும் உதகை 200 துவக்க விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற உள்ள நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்க  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் பயணமாக அங்கு சென்றுள்ளார். 

இதற்காக நேற்றிரவே விமானம் மூலம் கோயம்புத்தூர் சென்றடைந்த அவர், இன்று காலை தொழிலதிபர்கள் மற்றும் தொழில் கூட்டமைப்பினருடன் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். பின் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வழியாக உதகமண்டலம் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்கள் மத்தியில் முதலமைச்சர் திமுக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கிப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து குன்னூரிலிருந்து உதகைக்கு மு.க.ஸ்டாலின் புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு தோடர் பழங்குடியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது தோடர் பழங்குடியின மக்களுடன் சேர்ந்து சிறிது நேரம் முதலமைச்சர் நடனமாடினார். தொடர்ந்து அங்கிருந்த மக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். இதற்கிடையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வருகையையொட்டி அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.