சிங்கப்பூர் அதிபர்; தமிழரான தர்மன் சண்முகரத்னம் தேர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

M K Stalin Tamil nadu Singapore
By Jiyath Sep 01, 2023 06:30 PM GMT
Report

சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மன் சண்முகரத்னத்துக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதிபர் தேர்தல்

சிங்கப்பூர் நாட்டின் 9ஆவது அதிபரை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழரான மற்றும் சிங்கப்பூரின் ஆளும் கட்சியான மக்கள் செயல் கட்சியின் ஆதரவு பெற்ற, தர்மன் சண்முகரத்னம், சீன வம்சாவளியை சேர்ந்தவரும், சிங்கப்பூர் குடியுரிமை பெற்றவருமான காச்சோங், டான்தின் லியோன் ஆகியோர் அதிபர் தேர்தலில் போட்டியிட்டனர்.

சிங்கப்பூர் அதிபர்; தமிழரான தர்மன் சண்முகரத்னம் தேர்வு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து! | Mk Stalin Congratulation To Dharman Shanmugaratnam

இதில் 70.4 சதவீதம் வாக்குகளை பெற்று தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றார். அவருக்கு அந்நாட்டு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பல பேர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிய சிங்கப்பூர் அதிபரான தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் 'சிங்கப்பூரின் ஒன்பதாவது அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தர்மனுக்கு வாழ்த்துகள்.

உங்களுடைய தமிழ் பாரம்பரியமும், ஈர்க்கக்கூடிய தகுதிகளும் எங்களை பெருமையடைய செய்திருக்கிறது. உங்களது வெற்றி சிங்கப்பூர் மக்களின் பன்முகத்தன்மையை காட்டுகிறது. உங்களது ஆட்சிக்காலம் வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள் என்று மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.