இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளம் குகேஷ்- முக ஸ்டாலின் வாழ்த்து

M K Stalin Gukesh Dommaraju
By Fathima Jun 08, 2025 03:50 AM GMT
Report

நோர்வே செஸ் போட்டியில் அந்நாட்டை சேர்ந்த மேக்னஸ் கார்ல்சன் சாம்பியன் பட்டம் வென்றார்.

இறுதிச்சுற்று போட்டியில் அமெரிக்க வீரரான கருவானாவை எதிர்த்து விளையாடிய இந்திய வீரர் குகேஷ் மூன்றாம் இடம் பெற்றார்.

10 சுற்று போட்டிகளின் முடிவில் கார்ல்சன் 16 புள்ளிகளும், கருவானா 15.5 புள்ளிகளும், குகேஷ் 14.5 புள்ளிகளும் பெற்றனர்.

இந்திய செஸ் எதிர்காலத்தின் அடையாளம் குகேஷ்- முக ஸ்டாலின் வாழ்த்து | Mk Stalin Congrats Gukesh

இந்நிலையில் குகேஷ்-க்கு எக்ஸ் தளத்தில் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார் தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்.

அந்த பதிவில், 2025ம் ஆண்டு நார்வே செஸ் போட்டியில் 14.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்த வீரர் டி.குகேஷ் குறித்து பெருமை கொள்கிறோம், குறிப்பிடத்தக்க திறமை மற்றும் உறுதியுடன் இந்தியாவின் செஸ் எதிர்காலத்தின் அடையாளமாக குகேஷ் தொடர்ந்து பிரகாசித்து வருகிறார் என பதிவிட்டுள்ளார்.