இஸ்ரோ: ராக்கெட் கவுண்டவுனுக்கு குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!

M K Stalin Tamil nadu ISRO
By Jiyath Sep 04, 2023 04:30 PM GMT
Report

இஸ்ரோவில் ராக்கெட் ஏவுதலை வர்ணனை செய்து வந்த வளர்மதி மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

வளர்மதி மறைவு 

ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுனுக்கு குரல் கொடுத்து வந்த தமிழ்நாட்டை சேர்ந்த இஸ்ரோ விஞ்ஞானி வளர்மதி. இவர் கடந்த 2012-ல் விண்ணில் ஏவப்பட்ட RISat 1 திட்ட இயக்குனராக பணியாற்றினார்.

இஸ்ரோ: ராக்கெட் கவுண்டவுனுக்கு குரல் கொடுத்த விஞ்ஞானி வளர்மதி மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்! | Mk Stalin Condolence Isro Commentator Valarmathi

ஜூலை 14 ஆம் தேதி சந்திரயான்-3 விண்கலன் ஏவப்பட்ட நிகழ்வினை அவர் கவுன்ட்டவுன் தொடங்கி அதன் வெற்றிவரை அறிவித்தார். இவர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில், அவர் கடந்த சனிக்கிழமையன்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவுக்கு விஞ்ஞானிகள், பொதுமக்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வளர்மதி மறைவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். 

மு.க.ஸ்டாலின் இரங்கல் 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் "இஸ்ரோ விண்ணில் ராக்கெட்களை ஏவும்போது அவை குறித்த தகவல்களை வர்ணனை செய்து வந்த 'Mission Range Speaker' வளர்மதி மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்துகிறேன்.

மிகவும் சவாலான ஒரு பணியைத் திறம்படக் கையாண்டு, இஸ்ரோவின் முக்கியத் திட்டப்பணிகளுடைய வெற்றித் தருணங்களின் குரலாக ஒலித்த வளர்மதி மறைவால் வாடும் குடும்பத்தினருக்கும் அவரது பணியிடத் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்' என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.