கே.என்.நேரு வீட்டில் சோதனை- மு.க.ஸ்டாலின் கண்டனம்

M K Stalin K. N. Nehru
By Fathima Sep 05, 2026 05:28 AM GMT
Report

திமுக முன்னாள் அமைச்சர் கேஎன் நேரு வீட்டில் லஞ்சி ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் கேஎன் நேருவின் வீட்டில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நகராட்சி நிர்வாக துறையில் அமைச்சராக இருந்த போது வேலை வாங்கி தருவதாக கூறி ஆயிரம் கோடி ரூபாய் பணம் பெற்றதாக கூறப்படும் புகாரின் அடிப்படையில் இச்சோதனை நடைபெற்று வருகிறது.

சென்னையில் அடையாறு, திருவான்மியூர், அண்ணாநகர், ஆர்.ஏ.புரம் உள்ளிட்ட இடங்களிலும் கே.என்.நேருவின் குடும்பத்தினருக்கு சொந்தமான இடங்களிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

கே.என்.நேரு வீட்டில் சோதனை- மு.க.ஸ்டாலின் கண்டனம் | Mk Stalin Condemns Kn Nehru Raid

முக ஸ்டாலின் கண்டனம்

உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கிறது; சட்டமன்றக் கூட்டத்தொடரும் நடந்துகொண்டிருக்கிறது.

இந்நிலையில், முழுக்க முழுக்க அரசியல் காரணங்களுக்காகவே கழக முதன்மைச் செயலாளர் சகோதரர் திரு. கே.என். நேரு அவர்கள் மீதான சோதனை நடவடிக்கையைத் த.வெ.க. அரசு மேற்கொண்டுள்ளது.

ஆட்சி அமைக்க மற்ற கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்களை ராஜினாமா செய்ய வைத்து, சட்டமன்ற வளாகத்திலேயே அவர்களைத் தம் கட்சியில் சேர்த்ததையும் குதிரை பேரம் நடத்தியதையும், அது தொடர்பான புகார்களில் லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையைக் கூட பதியாததையும் தமிழ்நாட்டு மக்கள் நன்கறிவர்.

இந்திய ஐனநாயகத்தின் இருண்ட பக்கமாய் இந்தப் போக்கு தொடரும் நிலையில் வழக்கம்போல் திசைதிருப்பும் நடவடிக்கையைக் கையில் எடுத்துள்ளது இந்த ரீல்ஸ் அரசு.

திரு. K.N.NEHRU அவர்களும், கழகமும் புதிய அரசின் இத்தகைய பூச்சாண்டிகளுக்கெல்லாம் அஞ்சிட மாட்டோம். சட்டத்தின் வழியில் அனைத்தையும் எதிர்கொண்டு வெல்வோம்!

கே.என்.நேரு வீட்டில் சோதனை- மு.க.ஸ்டாலின் கண்டனம் | Mk Stalin Condemns Kn Nehru Raid