மக்களின் கோபத்தை திசைதிருப்ப முயற்சி - அன்பில் மகேஷ் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

M K Stalin Anbil Mahesh Poyyamozhi Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Oct 26, 2026 02:29 PM GMT
Report

mk stalin condemns for anbil magesh arrest: மக்களின் கோபத்தை திசைதிருப்ப முயற்சியாக அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அன்பில் மகேஷ் கைது

தனியார் பள்ளி உரிமையாளர்களிடம் ரூ.100 கோடிக்கு மேல் சட்டவிரோதமாக வசூலித்ததாக பதியப்பட்ட வழக்கில் முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 

மக்களின் கோபத்தை திசைதிருப்ப முயற்சி - அன்பில் மகேஷ் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் | Mk Stalin Condemns For Anbil Magesh Arrest

கைது செய்யப்பட்ட அவரிடம் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.

மு.க.ஸ்டாலின் கண்டனம்

இந்நிலையில், அரசியல் காழ்ப்புணர்வோடு இந்த கைது செய்யப்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

மக்களின் கோபத்தை திசைதிருப்ப முயற்சி - அன்பில் மகேஷ் கைதுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் | Mk Stalin Condemns For Anbil Magesh Arrest

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தன் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வந்த திரு. அன்பில் மகேஸ் அவர்களைக் கைது செய்திருப்பதன் மூலம், சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கின் அவலட்சணத்தையும், அழுகிக் கொண்டிருக்கும் நிர்வாகச் சீர்கேட்டையும் சில நாட்களுக்கு மறைத்து, மக்களின் கவனத்தைத் திசைதிருப்பிவிடலாம் என்று ஆளும் அரசு நினைக்கிறது. 

அன்பில் மகேஸ் அவர்கள் தன் மீதான குற்றச்சாட்டுகளைச் சட்டப்படி எதிர்கொள்வார். அதேசமயம், இதுபோன்ற கைது நடவடிக்கைகளால் மக்களின் கோபத்தைத் திசைதிருப்பித் தப்பித்துக்கொள்ளலாம் என்று நினைக்கும் த.வெ.க. அரசின் எண்ணம் நிச்சயம் ஈடேறாது!" என குறிப்பிட்டுள்ளார்.