நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றான தீர்ப்பு - பில்கிஸ் பானு வழக்கு - ஸ்டாலின் பதிவு..!

M K Stalin Gujarat India
By Karthick Jan 09, 2024 05:24 AM GMT
Report

 பில்கிஸ் பானு வழக்கில் நேற்று உச்சநீதிமன்றம், 11 பேருக்கு அளிக்கப்பட்டிருந்த விடுதலையை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பா.ஜ.க.வும் உடந்தையாக  

பலரும் இந்த தீர்ப்பு குறித்து பதிவிட்டு வரும் நிலையில், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனது கருத்தை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். இது குறித்து அவரின் பதிவில், சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.

mk-stalin-comments-on-bilkis-bano-case-sc-verdict

குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.

mk-stalin-comments-on-bilkis-bano-case-sc-verdict

தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்டகால சிறைவாசிகளை - நன்னடத்தையின் அடிப்படையிலும் வயது மூப்பு கருதியும் சட்டபூர்வமாக முன்விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது. 

விடுவிக்க அதிகாரமே இல்லை - பில்கிஸ் பானு வழக்கு - குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

விடுவிக்க அதிகாரமே இல்லை - பில்கிஸ் பானு வழக்கு - குஜராத் அரசுக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி..!!

எனது பாராட்டுக்கள்

“நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்; ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்” என்று சகோதரி பில்கிஸ் பானு அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன.

mk-stalin-comments-on-bilkis-bano-case-sc-verdict

நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள்.