ஒரு பொய்யை மறைக்க 9 பொய்கள்; தவெக எம்எல்ஏ கைது குறித்து மு.க.ஸ்டாலின்

M K Stalin Kallakurichi Thamizhaga Vetri Kazhagam Arrest
By Karthikraja Nov 27, 2026 01:30 PM GMT
Report

mk stalin comment on tvk mla arul vignesha arrest: கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைது

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவிற்கு, கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் தவறான குறுஞ்செய்தி அனுப்பியதாக குற்றச்சாட்டில், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

ஒரு பொய்யை மறைக்க 9 பொய்கள்; தவெக எம்எல்ஏ கைது குறித்து மு.க.ஸ்டாலின் | Mk Stalin Comment On Tvk Mla Arul Vignesha Arrest

இந்த வழக்கை விசாரிக்க திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரிஷ்டி சிங் தலைமையில் விசாரணை குழு அமைக்கப்பட்டு, கடந்த 2 நாட்களை விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் கருத்து

இந்த கைது சம்பவம் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "ஒரு பொய்யை மறைக்க ஒன்பது பொய்கள் என்பது போல, கள்ளக்குறிச்சி த.வெ.க. சட்டமன்ற உறுப்பினரின் ஒழுங்கீனத்தை மறைத்து, அவரைப் பாதுகாக்க பொய் மேல் பொய்களைக் கூறினார்கள். 

ஒரு பொய்யை மறைக்க 9 பொய்கள்; தவெக எம்எல்ஏ கைது குறித்து மு.க.ஸ்டாலின் | Mk Stalin Comment On Tvk Mla Arul Vignesha Arrest

அமைச்சர்கள் முதல் கூட்டணிக்கட்சித் தலைவர்கள் வரை வரிந்து கட்டிக் கொண்டு புகாரை மறுத்து, அருள் விக்னேஷுக்கு Conduct Certificate வழங்கும் வேலையில் இறங்கினார்கள்.

பாதிக்கப்பட்ட அதிகாரியை மனதளவில் உடைக்கும் வகையில் சமூக வலைத்தளங்களில் இழிவான பிரசாரம் மேற்கொண்டார்கள்.

அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு, அந்த இரும்புப் பெண்மணி தைரியமாகப் புகார் அளித்தார்.

உயர்நீதிமன்றம், மகளிர் ஆணையம் போன்ற அமைப்புகளின் சீற்றத்தால் வேறு வழியின்றி இப்போது TVK MLA கைது செய்யப்பட்டிருக்கிறார். 

119 நாட்களாக இதில் நடவடிக்கை எடுக்காமல், சமரசமாகச் செல்ல அழுத்தம் கொடுத்தவர்களும் நடவடிக்கைக்கு உள்ளாக வேண்டும்.

சட்டப்படி நியாயமான நீதி விசாரணை நடத்தப்பட்டு, தவறிழைத்த அனைவரும் தண்டிக்கப்படும் வரை நாங்கள் ஓயமாட்டோம்" என தெரிவித்துள்ளார். 

மாவீரர் நாள் - 27 நவம்பர் | சிறப்பு நேரடி ஒளிபரப்பு