தவெக ஒரு Breaking Bad Party - மு.க.ஸ்டாலின் விமர்சனம்

M K Stalin Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Oct 17, 2026 05:10 AM GMT
Report

mk stalin calls tvk as Breaking Bad Party: தவெக Breaking Bad Party யாக Promotion பெற்றுள்ளது என மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

தவெக நிர்வாகி கைது

நாகையைச் சேர்ந்த தவெக நிர்வாகி பூபாலனின் வீட்டில் NCB நடத்திய சோதனையில் ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் என்ற உயர்ரக போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

தவெக ஒரு Breaking Bad Party - மு.க.ஸ்டாலின் விமர்சனம் | Mk Stalin Calls Tvk As Breaking Bad Party

இதனையடுத்து, அவர் தவெகவின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

மு.க.ஸ்டாலின் விமர்சனம்

இந்த கைது சம்பவம் குறித்து விமர்சித்துள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், "சொந்தக் கட்சியிலேயே போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் தவெக தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். 

தவெக ஒரு Breaking Bad Party - மு.க.ஸ்டாலின் விமர்சனம் | Mk Stalin Calls Tvk As Breaking Bad Party

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஒன்றிய அரசின் DRI அதிகாரிகளால் நாகை மாவட்டத் த.வெ.க. நிர்வாகியும் கீழ்வேளூர் சட்டமன்றத் தொகுதியின் தேர்தல் பொறுப்பாளருமான பூபாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதை 'ஒழிப்பு' பற்றி முதலமைச்சர் மேடைதோறும் பாடமெடுத்து வருவதை, போதை 'ஒளிப்பு' எனத் தவறாகப் புரிந்துகொண்டு 135 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை ஒளித்து வைத்திருந்ததுதான் அவர் செய்துள்ள குற்றம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கேரியரின் உச்சத்தில் இருந்தபோது தொக்காக மாட்டியுள்ளார். சொந்தக் கட்சியிலேயே மிகப் பெரிய போதை மாபியாவை வைத்துக்கொண்டுதான் த.வெ.க. தலைவர் ஊருக்கு உபதேசம் செய்துகொண்டிருந்தாரா?

ஒரே சோதனையில் இந்த அளவுக்கு போதைப்பொருள் சிக்கியிருக்கிறதென்றால், இவர்களின் பின்னால் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் எனக் கண்டறிந்து மொத்த Network-ஐயும் சுற்றி வளைக்க வேண்டும்.

தாசில்தார் மூலமாகக் கம்யூனிஸ்டுகளைக் கணக்கெடுப்பதற்கு பதிலாக, மாவட்டத்துக்கு மாவட்டம் இப்படி எத்தனை லியோதாஸ்களும், பவுடர் சரத்களும் த.வெ.க.வில் இருக்கிறார்கள் என முதலில் கணக்கெடுங்கள்.

ஆட்சிக்கு வந்த ஐந்தே மாதங்களில் Bad Party என்று பெயரெடுத்திருந்த த.வெ.க., அடுத்தகட்டமாக Breaking Bad Party-யாக Promotion பெற்றுள்ளது.

"பயமா இருக்கா? போக போக இன்னும் பயங்கரமா இருக்கும்" என முதலமைச்சர் இதற்கும் Punch Dialogue அடிக்காமல் இருக்க வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.