28 ஆண்டு தலைமறைவு பயங்கரவாதிகளை கைது செய்த தமிழக ATS - முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

M K Stalin
By Karthikraja Jul 10, 2025 02:07 PM GMT
Report

தமிழக ATS பிரிவுக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

28 ஆண்டு பிறகு கைது

1998 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ம் தேதி, கோவையில் நடந்த தொடர் குண்டுவெடிப்பில், 58 பேர் உயிரிழந்தனர் மற்றும் 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். 

tailor raja - டெய்லர் ராஜா

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக இருந்த சாதிக் என்ற ராஜா என்ற டெய்லர் ராஜா, சுமார் 28 ஆண்டுகளுக்கும் மேலாக தலைமறைவாக இருந்து வந்தார்.

தமிழக ATS பிரிவினரால், 28 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 10) கர்நாடகாவில் தலைமைறைவாக இருந்த டெய்லர் ராஜா கைது செய்யப்பட்டுள்ளார்.

28 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ராஜாவை கைது செய்த தமிழக ATS பிரிவுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் பாராட்டு

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "நமது திராவிட மாடல் அரசு ஆட்சிக்கு வந்தபின், 2023-ஆம் ஆண்டில், தீவிரவாத எதிர்ப்புப் பணிகளில் தனிக்கவனம் செலுத்துவதற்காக நுண்ணறிவுப் பிரிவின் கீழ், #AntiTerrorismSquad புதிதாக உருவாக்கப்பட்டது. 

28 ஆண்டு தலைமறைவு பயங்கரவாதிகளை கைது செய்த தமிழக ATS - முதல்வர் ஸ்டாலின் பாராட்டு | Mk Stalin Appreciate Tamilnadu Ats

கடந்த 30 ஆண்டுகளாக, தமிழ்நாடு காவல்துறை, ஒன்றிய அரசின் புலனாய்வு அமைப்புகள், அண்டை மாநிலக் காவல்துறையினர் என யாருக்கும் பிடிபடாமல் இருந்த, அபுபக்கர் சித்திக் உள்ளிட்ட மூன்று முக்கியத் தீவிரவாதிகளை, அண்மையில் நமது ATS படையினர் சிறப்பாகச் செயல்பட்டுக் கைது செய்துள்ளனர். 

உள்நாட்டுப் பாதுகாப்பில் நமது நாட்டிலேயே தமிழ்நாடு காவல்துறை முன்னணி வகிக்கிறது என்பதை மீண்டும் நிலைநாட்டியுள்ள ATS படையினருக்கும், அவர்களை வழிநடத்திய நுண்ணறிவுப் பிரிவு அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.

இந்தக் கைது நடவடிக்கைகளுக்கு உறுதுணையாக இருந்து உதவிய கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலக் காவல்துறையினருக்கும் எமது நன்றிகள்" என குறிப்பிட்டுள்ளார்.