இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி - பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு

M K Stalin Chennai Indian Army
By Karthikraja May 10, 2025 04:14 AM GMT
Report

 இந்திய ராணுவத்திற்கு ஆதரவாக நடைபெறும் பேரணியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் போர் பதற்றம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் பகுதிகளில், உள்ள 9 பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. 

indian army

இதனையடுத்து, பாகிஸ்தானும் அவ்வப்போது இந்திய எல்லைக்குள், ட்ரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு அந்த ட்ரோன்களை வானிலேயே சுட்டு வீழ்த்தி வருகிறது. 

பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியாவும் பாகிஸ்தானில் ட்ரோன் தாக்குதல்கள் நடத்தி வருகிறது. இதன் காரணமாக, இரு நாடுகளுக்குமிடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

ராணுவத்திற்கு ஆதரவாக பேரணி

இந்நிலையில், இந்தியா ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், சென்னையில் பேரணி நடத்த உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

mk stalin

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பாகிஸ்​தானின் அத்​து​மீறல்​கள், தீவிர​வாத தாக்​குதல்​களுக்கு எதி​ராக வீரத்​துடன் போர் நடத்தி வரும் இந்​திய ராணுவத்​துக்கு நமது ஒன்​று​பட்ட ஒற்​றுமை​யை​யும், ஆதர​வை​யும் வெளிப்​படுத்த வேண்​டிய தருணம் இது. 

அதை வெளிப்​படுத்​தும் வகை​யில், சென்னை மெரி​னா​வில் உள்ள டிஜிபி அலு​வல​கத்​தில் இருந்து எனது தலை​மை​யில் இன்று மாலை 5 மணிக்கு பேரணி நடை​பெறும். தீவுத்​திடல் அருகே உள்ள போர் நினைவு சின்​னம் அருகே பேரணி நிறைவு பெறும்.

இதில் முன்​னாள் படைவீரர்​கள், அமைச்​சர்​கள், பொது​மக்​கள், மாணவர்​கள் பங்​குபெறுகின்​றனர். இந்​திய ராணுவத்​தின் வீரம், தியாகம், அர்ப்​பணிப்பை போற்​று​வதற்​கும், தேச ஒற்​றுமையை வலுப்​படுத்​து​வதற்​கும் இந்த பேரணி நடத்​தப்​படு​கிறது.

இதில் தமிழக மக்​கள் திரளாக பங்​கேற்​று, நமது ராணுவத்​துக்கு ஆதரவு தெரிவிக்​கு​மாறு கேட்​டுக் கொள்கிறேன்" என தெரி​வித்​துள்​ளார்​.