பொங்கல் பரிசுத் தொகை எவ்வளவு? முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3,000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
பொங்கல் பரிசுத் தொகை
ரூ.3,000 தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக கொண்டாட தமிழ்நாடு அரசு சார்பில் ஆண்டுதோறும் பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

கடந்த 2021 ஆம் ஆண்டில், ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.2,500 ரொக்கப் பணம் வழங்கப்பட்டது.
அடுத்து வந்த திமுக ஆட்சியில், 2022 முதல் 2024 ஆம் ஆண்டு வரை தலா ரூ.1,000 வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த ஆண்டு பரிசுத்தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டு, பணம் வழங்கப்படவில்லை.
இந்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், பொங்கல் பரிசு தொகுப்புடன் பணமும் வழங்கப்படும் என அனைவரும் எதிர்பார்த்து வந்தனர்.
இந்நிலையில், பரிசுத்தொகுப்புடன் ரூ.3,000 வழங்க தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதன்படி, 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும், பொங்கல் பரிசுத்தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முழு நீளக்கரும்பு, வேட்டி, சேலைகள் மற்றும் ரூ.3,000 பணம் வழங்கப்பட உள்ளது.
தினமும் சுமார் 400 ரேஷன் கார்டுகளுக்கு பொருட்களும் ரொக்கப் பணமும் வழங்கி, ஜனவரி 14 ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஜனவரி 8 ஆம் தேதி இந்த திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் எனவும், அதற்கு முன் அனைத்து வீடுகளுக்கும் டோக்கன் கொடுக்கும் பணிகள் நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.