திமுக எந்த இடையூறும் செய்யாது: முக ஸ்டாலின்

Vijay M K Stalin TVK
By Fathima May 07, 2026 03:26 AM GMT
Report

தவெக ஆட்சியமைக்க திமுக எந்தவொரு இடையூறும் செய்யாது என திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் 108 தொகுதிகளை வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தவெக ஆட்சியமைக்க அழைக்குமாறு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது.

இதற்கிடையே காங்கிரஸ் திமுக கூட்டணியிலிருந்து விலகி தவெக-வுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இருப்பினும் 118 தொகுதி பெரும்பான்மை கிடைக்காததால் தவெக செய்யப்போவது என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் தவெக ஆட்சியமைக்க திமுக எந்தவொரு இடையூறும் செய்யாது என முன்னாள் முதலமைச்சரான முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும், திமுக விரைவான ஓர் அரசியலமைப்பு நெருக்கடியையோ மற்றொரு தேர்தலையோ விரும்பவில்லை.

புதிதாக அமையும் அரசு திமுகவின் திட்டங்களை தொடர வேண்டும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கான திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை தொடர வேண்டும்.

தவெக ஆட்சியமைக்க 6 மாதங்களுக்கு திமுக-வினால் எந்த இடையூறும் இருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.