2023 Rewind - மக்கள் மனதை மகிழ்வித்த திராவிட மாடல் - நினைவுகூர்ந்த முதல்வர் முக ஸ்டாலின்..!

M K Stalin DMK Chief Minister of Tamil Nadu
By Karthick Dec 31, 2023 07:54 AM GMT
Report

 2023-ஆம் ஆண்டு நிறைவடையும் நிலையில், ஆட்சியில் ஓர் ஆண்டில் நடந்த நிகழ்வுகளை தமிழக முதல்வர் நினைவுகூர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Rewind 2023

இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள வீடியோ பதிவில், இந்த #2023-ஆம் ஆண்டு நினைவலைகளின் #Throwback காணொளியை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்...

mk-stalin-2023-video-rewind-in-twitter

இனிய மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளால் பலவித அனுபவங்களை வழங்கிய இந்த 2023-ஐ வழியனுப்பி, புதிய அனுபவங்களைப் பெறவும் சாதனைகளைத் தொடர்ந்து படைக்கவும் #2024-ஐ வரவேற்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

முதல்வர் வீடியோ

அவர் இணைத்துள்ள வீடியோவில், ஜனவரி, பிப்ரவரி என ஒவ்வொரு மாதத்திலும் அரசினால் கொண்டு வரப்பட்ட திட்டங்கள் குறித்து பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

mk-stalin-2023-video-rewind-in-twitter

காலை உணவு திட்டம், ஏற்றமிகு 7 திட்டங்கள், குடியரசு - சுதந்திர தின விழாக்கள், புதுமை பெண் திட்டம் போன்ற திட்டங்கள் குறித்த பதிவுகள் இடம்பெறுள்ளன. இந்த வீடியோவில் தமிழக ஆளுநருக்கு எதிராகவும் ஒரு குறிப்பு இடம்பெற்றிருந்தது.

mk-stalin-2023-video-rewind-in-twitter

கலைஞர் 100 விழா, கலைஞர் நூற்றாண்டு நூலகம், மார்ச்சில் நடைபெற்ற முதல்வர் பிறந்த நாள் விழா இந்தியா கூட்டம் போன்றவையும் இந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளன. மேலும், அந்த வீடியோவில் திமுக அரசு அளித்த முக்கிய தேர்தல் வாக்குறுதியான மகளிர் உரிமை திட்டம் திட்டம் குறித்தும் பதிவிடப்பட்டுள்ளது.