மாஸ்காட்டும் ஸ்டாலின் அவதூறான 130 வழக்குகள் ரத்து! எந்தெந்த தலைவர்கள் தெரியுமா?

mkstalin tngovt 130case againstpoliticalleaders
By Irumporai Jul 30, 2021 04:20 PM GMT
Report

தமிழகத்தில் மு.க ஸ்டாலின் தலைமையிலான அரசு அமைந்தது முதல் பல்வேறு அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் தற்போது அரசியல் கட்சி தலைவர்கள் மீதான சுமார் 130 அவதூறு வழக்குகளை ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

130 வழக்குகள் ரத்து எந்தெந்த தலைவர்கள் :

2012 முதல் 2021-ம் ஆண்டு பிப்ரவரி அதிமுக ஆட்சியில் அரசியல் கட்சி தலைவர்கள் மீது தொடரப்பட்ட வழக்குகள் அதிரடியாக ரத்து செய்யப்பட்டுள்ளன.

2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை அவதூறுப் பேச்சுக்களுக்காக, தேமுதிக தலைவர் விஜய்காந்த் மற்றும் பிரேமலதா விஜயகாந்த்.

காங்கிரஸ் கட்சியின் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும் விஜயதாரணி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர், ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் பிரமுகர்கள் திருவாளர்கள் பழ.கருப்பைய்யாமற்றும் நாஞ்சில் சம்பத்.

அறப்போர் இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேசன், கணேசன், திமுக திருவாளர்கள் கே.என்.நேரு மற்றும் எஸ்.எம்.நாசர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மு.க.கனிமொழி.

திருவாளர்கள் தயாநிதிமாறன், ஆர்.எஸ்.பாரதி, எஸ.ஆர்.பார்த்திபன் மற்றும் திமுக தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஆகியோர் மீது சுமார் 130 அவதூறு வழக்குகள் போடப்பட்டிருந்தன .

இந்த அவதூறு வழக்குகளை திரும்ப பெறவும், அதன் மீதான அனைத்து மேல் நடவடிக்கைகளையும் கைவிடவும், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்கள்.