சொன்னதை செய்தாரா ஸ்டாலின்? 100 நாள் ஆட்சி சாதகமா- பாதகமா?

dmk stalin tn govt 100 th day
By Anupriyamkumaresan Aug 14, 2021 05:50 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in தமிழ்நாடு
Report

2021ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது.

தி.மு.க. தலைமையிலான அரசு கடந்த மே 7ம் தேதி தமிழக சட்டமன்றத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. அன்றைய தினம் தான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தமிழகத்தின் முதலமைச்சராக பதவி ஏற்றார்.

சொன்னதை செய்தாரா ஸ்டாலின்? 100 நாள் ஆட்சி சாதகமா- பாதகமா? | Mk Stalin 100 Thday Today Dmk Tn Govt

இன்று தி.மு.க. தலைமையிலான தமிழக அரசு பதவியேற்று 100வது நாளை எட்டியுள்ளது. இந்த அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல திட்டங்களை நடைமுறைக்கு கொண்டு வந்தது.

தேர்தல் அறிக்கையின்போது வெளியிட்ட திட்டங்களை செயல்படுத்தியும் வருகிறது. மேலும் ஒவ்வொரு துறையிலும் அமைச்சர்கள் தங்கள் பணிகளை திறம்பட செய்து வருகின்றனர். தி.மு.க. அமைச்சர்கள் அனைவரும் அனுபவம் வாய்ந்தவர்களாகவும் மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்களாகவும் திகழ்கின்றனர்.

எதிர்க்கட்சிகளே வியக்கும் அளவிற்கு மக்கள் பணியில் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

100 நாட்களில் செய்த எண்ணற்ற திட்டங்கள்:  

*உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற புதிய துறையை உருவாக்கி அதன் மூலம் புகார்கள் மனுக்கள் மூலமாக பெறப்பட்டது.புகார்களுக்கு தீர்வும் அளிக்கப்பட்டது.

*ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டது.

*கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் எதிர்கால வாழ்வுக்காக சிறப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது.

சொன்னதை செய்தாரா ஸ்டாலின்? 100 நாள் ஆட்சி சாதகமா- பாதகமா? | Mk Stalin 100 Thday Today Dmk Tn Govt

*தாய்,தந்தையை இழந்த குழந்தைகளுக்கு 5 லட்சம் ரூபாயும் பெற்றோரில் ஒருவரை இழந்த குழந்தைக்கு 3 லட்சம் ரூபாயும் வங்கியில் வைப்பு நிதியாக வைக்கப்பட்டது.

* அரசு நகரப் பேருந்துகளில் மகளிர்,திருநங்கையர்,மாற்றுதிறனாளிகளுக்குக் கட்டணமில்லா பயணம்.

*அறநிலையத்துறைக்கு உட்பட்ட அனைத்துக் கோயில்களின் சொத்து ஆவணங்கள் வெளிப்படையாக இணையத்தில் பதிவேற்றப்பட்டன.

*58000 அரசுப் பள்ளிகள் நவீனமயமாக்கப்படும் என்ற அறிவிப்பு.வீடுகளைத் தேடி மருத்துவ உதவிகளை வழங்கும் மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

சொன்னதை செய்தாரா ஸ்டாலின்? 100 நாள் ஆட்சி சாதகமா- பாதகமா? | Mk Stalin 100 Thday Today Dmk Tn Govt

*தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்குத் தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

*1950ம் ஆண்டு முதல் வில்லங்க விவரங்களைப் பத்திரப்பதிவு இணையதளத்தில் பார்க்கும் வசதிக்கான பணிகள் துவக்கப்பட்டது.

ஆட்சி அமைத்த நூறு நாட்களில் இந்த திட்டங்களை எல்லாம் கொண்டு வந்த தி.மு.க. அரசு மக்களின் நலனில் அக்கறையாக செயல்படுகிறது என பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.