கல்லூரி விவகாரம்..முதலில் இதனை நிறுத்துங்க...பிரதமருக்கு முதல்வர் முக ஸ்டாலின் கடிதம்

M K Stalin Tamil nadu DMK BJP Narendra Modi
By Karthick Oct 04, 2023 06:03 AM GMT
Report

தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டும் என தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தேசிய மருத்துவ ஆணையம்

புதிய விதி தேசிய மருத்துவ ஆணையம் (National Medical Commission) வகுத்திருக்கும் புதிய விதிகளின்படி, தமிழ்நாட்டில் மருத்துவக் கல்லூரிகளும், அவற்றில் உள்ள மாணவர் சேர்க்கை இடங்களும் தேவைக்கும் அதிகமாக இருப்பதால், அடுத்த ஆண்டு முதல் புதிய மருத்துவக் கல்லூரிகளை திறக்கவும், மாணவர் சேர்க்கை இடங்களை அதிகரிக்கவும் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

mk-stain-writes-letter-to-pm-modi-in-nmc-new-laws

இந்த விதிகளின் வெளியான நிலையில், இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார். அவர் எழுதியுள்ள கடிதத்தில், இத்தகைய கட்டுப்பாடு விதிப்பதன் மூலம், எதிர்காலத்தில் மருத்துவத் துறையில் புதிய மருத்துவமனைகளும், புதிய முதலீடுகளும் தமிழ்நாட்டிற்கு வருவதற்கான வாய்ப்பு முற்றிலுமாக இல்லாமல் போய்விடும் என சுட்டிக்காட்டி, தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினை உடனடியாக நிறுத்தி வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி இருக்கின்றார்.

மேலும், இதுதொடர்பாக மாநில அரசுகளுடன் உரிய ஆலோசனைகளை மேற்கொள்ளத் தேவையான அறிவுரைகளை ஒன்றிய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திற்கு வழங்கிட வேண்டுமென தனது கடிதத்தில் தமிழ்நாடு முதல்வர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.