அண்ணன் என்ற முறையில் எனது தம்பிக்கு வாழ்த்துகள் - ஸ்டாலினை வாழ்த்திய மு.க.அழகிரி
DMK
CM
MK Stalin
MK Alagiri
By mohanelango
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை உடன் வென்று பத்து ஆண்டுகள் கழித்து ஆட்சி அமைக்கிறது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை முதல்வராகப் பொறுப்பேற்க உள்ளார். ஆளுநர் மாளிகையில் எளிமையான முறையில் இந்த பதவியேற்பு விழா நடைபெற இருக்கிறது.
இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலினின் சகோதரர் மு.க.அழகிரி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
”அண்ணன் என்ற முறையில் எனது தம்பிக்கு வாழ்த்துகள். ஸ்டாலினை நினைத்து பெருமைப்படுகிறேன். ஸ்டாலின் நிச்சயம் நல்லாட்சியைத் தருவார்” என்றும் தெரிவித்துள்ளார்.