மிசோரம்: அரசியலும், தொடரும் எல்லைப் பிரச்சனையும் - பின்புலம் என்ன?
மிசோரம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. அய்சால் இம்மாநிலத்தின் தலைநகர். மீசோ பழங்குடி இன மக்கள் இங்கு பெரும்பான்மையாக வசிக்கின்றனர். பெரும்பான்மையான மக்கள் கிறித்தவர்கள். மிசோரம் மாநில மக்களின் கல்வியறிவு விகிதம் 91.33%. கேரளத்துக்கு அடுத்தபடியாக அதிக கல்வியறிவு உள்ள மாநிலம் இது.
மிசோரம்
40 சட்டமன்றத் தொகுதிகளும், ஒரு நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியும் கொண்டது. இங்கு உள் நுழைவதற்கு ILP(Inner line Permit) எனும் அனுமதியை இம்மாநில அரசு வழங்குகிறது. ILP பெறாமல் அடுத்த மாநிலத்தவர்கள் அனுமதிக்கப் படுவதில்லை. தரைவழி பயணிப்பவர்கள் கவுகாத்தியில் உள்ள மிசோரம் ஹவுஸிலும் (Miozram House), விமானம் வழியாக பயணிப்பவர்கள் லெங்க்புய் விமான நிலையத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கு அரசு வழங்கியுள்ள ஏதாவது ஒரு அடையாள அட்டை மற்றும் ஒரு புகைபடத்தை உபயோகிக்கலாம்.
சு சுங்கா
1972 முதல், நான்கு கட்சிகளிலிருந்து ஐந்து பேர் மிசோரம் முதலமைச்சராக பதவி வகித்துள்ளனர். மிசோரம் மாநிலத்தின் முதலமைச்சராக முதன்முதலில் சு சுங்கா என்பவர் 1972 முதல் 1997 வரை பதவி வகித்தார். அதன்பின் டி.சைலோ முதலமைச்சரானார். 1978 மற்றும் 1979-1984 வரை இருமுறை பதவியில் இருந்தார். இதற்கிடையில் மாநிலம் அவ்வப்போது குடியரசு ஆட்சியின் கீழ் இருந்தது.
லால் தன்ஃகாவ்லா
தொடர்ந்து, லால் தன்ஃகாவ்லா மாவட்ட பள்ளிகளின் ஆய்வாளர் அலுவலகத்தில் எழுத்தராக வாழ்வைத் துவங்கினார். பின்னர் அசாம் கூட்டுறவு அபெக்சு வங்கியில் சேர்ந்தார். 1966ஆம் ஆண்டு மிசோ தேசிய முன்னணியில் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். 1967ஆம் ஆண்டு அதன் செயலாளராக விளங்கினார். சில்ச்சரில் சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையான பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் இணைந்தார்.1973ஆம் ஆண்டு கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1978 மற்றும் 1979 ஆண்டுகளில் ஆட்சிப்பகுதியாக இருந்த மிசோரம் சட்டப்பேரவை உறுப்பினாராக இருந்தார்.1984ஆம் ஆண்டு மாநில நிலை பெற்ற மிசோரமின் தேர்தல்களில் அவர் தலமையில் போட்டியிட்ட காங்கிரசு கட்சிக்கு பெரும் வெற்றி கிடைத்ததை அடுத்து முதலமைச்சரானார்.1986ஆம் ஆண்டு மிசோரம் தேசிய முன்னணிக்கும் இந்திய அரசிற்கும் ஏற்பட்ட அமைதி உடன்படிக்கையை யொட்டி தமது முதல்வர் பதவியிலிருந்து விலகினார். 1987ஆம் நடந்த தேர்தல்களில் மீண்டும் வெற்றி பெற்று முதல்வராகப் பொறுப்பேற்றார். 1989 மற்றும் 1993ஆம் ஆண்டுகளில் நடந்த தேர்தல்களிலும் வெற்றிபெற்று முதல்வராகத் தொடர்ந்து வந்தார்.1998ஆம் ஆண்டு தேர்தல்களில் தோல்வி கண்டவர் மீண்டும் 2003ஆம் ஆண்டுத் தேர்தல்களில் வெற்றி பெற்று முதலமைச்சராக பொறுப்பேற்றார். 21 ஆண்டுகள் (5 முறை), நீண்டகாலமாக பதவியில் இருந்தவர் என்ற பெருமை பெற்றவர்.
சோரம்தங்கா
தற்போது மிசோ தேசிய முன்னணி கட்சியைச் சேர்ந்த சோரம்தங்கா என்பவர் முதலமைச்சராக பதவியில் உள்ளார். சட்டமன்றத் தேர்தலில் மிசோ தேசிய முன்னணி (எம்என்எப்) 26 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆட்சியில் இருந்த காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது. 40 தொகுதிகளைக் கொண்ட சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 5 இடங்கள் மட்டுமே கிடைத்தன. பாஜக ஒரு இடத்தில் வெற்றி பெற்றது.
இந்தி தெரியாது
இந்நிலையில், முதல்வர் மாநில மக்களில் பெரும்பான்மையோருக்கு இந்தி மொழி தெரியாது. என்னுடைய அமைச்சரவை சகாக்களும் இந்தி மொழியை புரிந்து கொள்ள முடியாதவர்கள்தான். சில அமைச்சர்களுக்கு ஆங்கில மொழியில் பேசுவது கூட புரியாத நிலைதான் உள்ளது. இந்த பின்னணியில், மாநிலத்தின் மொழியான மிசோ மொழி தெரியாத ஒரு தலைமை செயலாளரால் ஆக்கப்பூர்வமாக செயல்பட முடியாது. மிசோ மொழி தெரியாத அதிகாரியை மாநிலத்தின் தலைமை செயலாளராக இதுவரை மத்திய அரசு நியமித்தது இல்லை.
முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாக இருந்தாலும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாக இருந்தாலும் இந்த நடைமுறைதான் பின்பற்றப்பட்டு வந்தது. எனவே, புதிய தலைமை செயலாளராக நியமிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியிருந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மகள் சர்ச்சை
மேலும், மிசோரம் முதல்வர் ஜோரம்தங்காவின் மகள் மிலாரி சாங்தே, ஐஸ்வால் பகுதியில் இருக்கும் பிரபல தோல் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்கான முன் அனுமதி பெறாமல் சென்றிருக்கிறார். அந்த மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் சோனுனசங்கா, ``ஏற்கெனவே அனுமதி கேட்டுப் பெற்ற நோயாளிகளைத்தான் கவனிக்க முடியும். அதனால், முன் அனுமதி பெறாத யாரையும் இப்போது கவனிக்க முடியாது" என மறுத்திருக்கிறார்.
மருத்துவரின் பதிலால் ஆத்திரமடைந்த முதல்வரின் மகள் மிலாரி சாங்தே மருத்துவரைத் திட்டி, அவரைத் தாக்கியிருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.அதைத் தொடர்ந்து, முதல்வர் மகளின் இந்தச் செயலுக்கு மிசோரமில் சுமார் 700 மருத்துவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பணியிடங்களுக்கு கறுப்பு பேட்ஜ் அணிந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், மிசோரம் முதல்வர் ஜோரம்தங்கா மருத்துவர்களிடமும், பொதுமக்களிடமும் பகிரங்கமாக மன்னிப்புக் கேட்டார்.
எல்லைப் பிரச்சனை
இதில் மாநிலம் பெரும் பிரச்சனை ஒன்றை தொடர்ந்து சந்தித்து வருகிறது. அஸ்ஸாம்-மிசோரம் ஆகிய மாநிலங்கள் 164.6 கி.மீ எல்லைப் பகுதியைப் பகிர்ந்துகொண்டிருக்கின்றன. இரு மாநிலங்களுக்குமிடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின்படி , எல்லைப் பகுதியிலுள்ள நிலங்களை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஆனால், இரு மாநிலத்தவரும் இதைப் பல சமயங்களில் மீறியதால் வன்முறைகள் அரங்கேறின.
லைலாப்பூரிலுள்ள மக்கள் சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் சில தற்காலிக குடிசைகளை அமைத்தனர். அந்தக் குடிசைகளை மிசோரம் மக்கள் தீயிட்டுக் கொளுத்தினர். இது போன்ற அந்த சர்ச்சைக்குரிய எல்லைப் பகுதியை இரு மாநிலத்தவரும் ஒப்பந்தங்களை மீறி சொந்தம் கொண்டாடுவதால்தான் அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. வடகிழக்கு மாநிலங்களில் அடிக்கடி நிகழும் எல்லைப் பிரச்னைகளில் மத்திய, மாநில அரசுகள் உட்கார்ந்து பேசி ஒரு நிரந்தரத் தீர்வை எட்ட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் ஒருமித்த கோரிக்கையாக இருக்கிறது.
தேர்தல்
இதற்கிடையில், வரும் 2023ல் நடக்கும் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 40 தொகுதிகளிலும் பாஜக தனித்து போட்டியிடுவதாக மிசோரம் பா.ஜ., தலைவர் வன்லால்முகா அறிவித்துள்ளார். ஆட்சிக்காலம் வரும் டிசம்பரில் முடிவடைய உள்ள நிலையில், நவம்பர்-டிசம்பர்ல் தேர்தல் நடைபெற உள்ளது.