மிசோரமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பயந்து ஓடிய பொதுமக்கள்

earthquake Mizoram
By Anupriyamkumaresan Nov 26, 2021 06:58 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in உலகம்
Report

மிசோரமில் இன்று அதிகாலை 5.15 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

மிசோரம் மாநிலம் தென்சால் பகுதியில் இருந்து 73 கி.மீ. தொலைவில் ரிக்டர் 6.1 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக மேற்கு வங்காளம், திரிபுரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களிலும் நில அதிர்வு உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்காள தேசத்தில் உள்ள சிட்டகாங் பகுதியிலிருந்து கிழக்கே 183 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கத்தின் மையம் இருந்தது.

மிசோரமில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பயந்து ஓடிய பொதுமக்கள் | Mizoram Earth Quake Public Fear

இதன் காரணமாக அந்நாட்டின் ஒரு சில பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டதாக ட்விட்டரில் பலர் பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உடனடி விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை.

அதிகாலை 5.53 மணிக்கு இரண்டாவது நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.