பிரபல நடிகையின் தந்தையின் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகினர்
நடிகை மியா ஜார்ஜ் தந்தை திடீரென காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.
மலையாள சினிமாவில் ஒரு ஸ்மால் பேமிலி என்ற படத்தின் மூலம் அறிமுகமான மியா ஜார்ஜ் தொடர்ந்து மெமரிஸ், ரெட் வைன், டிரைவிங் லைசென்ஸ் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் அமரகாவியம் படத்தில் அறிமுகமான மியா அமரகாவியம், இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து உள்பட படங்களில் நடித்துள்ளார்.
இவருக்கும் கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த தொழிலதிபர் அஸ்வின் பிலிப்பையாவுக்கும் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த ஜூலை மாதம் ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் மியா ஜார்ஜின் தந்தை ஜார்ஜ் ஜோசப் கோட்டயம் அருகே பாலாவில் உள்ள வீட்டில் திடீரென மரணமடைந்தார். அவரது தந்தை மறைவுக்கு பிரபலங்கள் தங்கள் இரங்கலை தெரிவித்துள்ளனர்.