நோய் எதிர்ப்புத் திறனை வலுப்படுத்தும் கலப்பு தடுப்பூசி - ஆய்வில் தகவல்
கொரோனாவை தடுக்க விரு விரு தடுப்பூசிகளை எடுத்துக்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள கொரோனாவை தடுக்க கோவிஷீல்ட், கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட பல தடுப்பு மருந்துகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே இரு வேறு தடுப்பூசிகளை கொரோனாவை தடுக்க எடுத்துக் கொள்வது தொடர்பான ஆய்வுகள் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றன. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவக் குழுவும் இது தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இதில் பைசர் மற்றும் அஸ்ட்ரா ஜெனிகா ஆகிய இரு தடுப்பூசிகளை இரு நாட்களாக கலப்பின முறையில் எடுத்துக் கொள்பவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது தெரியவந்துள்ளது. இந்த முடிவு தடுப்பூசி மீதான குழப்பத்தை தெளிவுபடுத்தும் என்றும், தடுப்பூசி பற்றாக்குறை இல்லாமல் போகும் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.