இந்திய வீரர்களால் விம்பிள்டனில் நடந்த சுவாரஸ்ய சம்பவம்

Wimbledon tennis Indian players
By Petchi Avudaiappan Jul 03, 2021 10:31 AM GMT
Report

விம்பிள்டன் டென்னிஸில் முதன் முறையாக ஒரு போட்டியில் இந்திய வீரர்கள் மட்டுமே பங்கேற்ற நிகழ்வு அரங்கேறியுள்ளது.

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் இங்கிலாந்தில் நடந்து வருகிறது. இதில் கலப்பு இரட்டையர் முதல் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா - சானியா மிர்சா ஜோடி மற்றொரு இந்திய ஜோடியான ராம்குமார் - அங்கிதா ரெய்னா ஜோடியை எதிர்த்து விளையாடியது.

இப்போட்டியில் 6 - 2, 7 - 6 என்ற செட் கணக்கில் போபண்ணா - சானியா மிர்சா ஜோடி வெற்றி பெற்றது.

இதேபோல் பெண்கள் இரட்டையர் பிரிவில் நடந்த போட்டி ஒன்றில் அமெரிக்காவின் பெத்தானி மேட்டக் - சானியா மிர்சா ஜோடி வெற்றிப் பெற்று 2ஆவது சுற்றுக்கு முன்னேறியது.