ஒலிம்பிக் பதக்கத்தைக் கடித்த மேயர்: புது பதக்கம் கொடுக்கும் ஒலிம்பிக் குழு!
ஒலிம்பிக் பதக்கம் வாங்கிய வீரரின் பதக்கத்தை மேயர் கடித்தத்தால் பதக்கம் வாங்கிய விளையாட்டு வீரருக்கு புதிய பதக்கம் தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கடந்த ஞாயிற்றுகிழமையுடன் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது. இதில் ஜப்பான் சாஃப்ட் பால் அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றது அந்த அணியைச் சேர்ந்த மியா கோடோ என்ற வீராங்கனை நகோயா பகுதியைச் சேர்ந்தவர். அவரை பாராட்டும் விதமாக அந்தப் பகுதி மேயர் ஒரு நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தி இருந்தார்.
அந்த நிகழ்ச்சியில் மியாவிடம் இருந்து தங்கப்பதக்கத்தை வாங்கிய மேயர் டக்காஷி கவமுரா திடீரென அந்த பதக்கத்தை தன்னுடைய பற்களால் கடித்தார். மேயரின் இந்த செயல் மியா கோடோவையும் அங்கிருந்தவர்களையும் வெறுப்படைய வைத்தது

மேலும் இந்த விவகாரம் சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தவே டோக்கியோ ஒருங்கிணைப்பாளர்கள் தற்போது அந்த பதக்கத்தை மாற்றி தருவதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள தகவலின் படி மியா கோட்டூவின் பதக்கத்தை நாங்கள் மாற்றி புதிதாக ஒரு தங்கப்பத்தை கொடுக்க உள்ளோம். இதற்கு ஏற்படும் மொத்த செலவை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் ஏற்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது பதக்கத்தை உடனடியாக மாற்று கொடுக்க முன்வந்த டோக்கியோ ஒருங்கிணைப்பாளர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.