'மிக்க மகிழ்ச்சி'- நோட்டு பேப்பரில் ராஜினாமா அனுப்பிய உயர் அதிகாரி - வைரலாகும் கடிதம்!
உயர் அதிகாரி ஒருவர் நோட்டு பேப்பரில் ராஜினாமா கடிதம் எழுதி அனுப்பிய சம்பவம் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராஜினாமா கடிதம்
மும்பையை தலைமையிடமாக கொண்டு மிட்ஷி இந்தியா லிமிட் என்ற பெயிண்ட் தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பிளாஸ்டிக், மற்றும் உலோகப் பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகிறது.
சுமார் ரூ. 19 கோடி மதிப்புள்ள இந்த நிறுவனத்தில் ரிங்கு பட்டேல் என்பவர் தலைமை நிதி அதிகாரியாக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் அவர், தனிப்பட்ட காரணங்களுக்காக அந்த நிறுவனத்திலிருந்து விலக முடிவெடுத்துள்ளார். அதற்காக தனது கைப்பட ராஜினாமா கடிதம் ஒன்றை எழுதி நிறுவனத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.
இணையத்தில் வைரல்
அந்த கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஏனெனில், மின்னஞ்சல்களின் யுகத்தில், தனது மகனின் நோட்புக்கிலிருந்து கிழிக்கப்பட்ட ஒரு காகிதத்தில் தனது ராஜினாமாவை எழுதி அனுப்பியுள்ளார் ரிங்கு பட்டேல்.
இதுதான் நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த கடிதத்தில் "எனது தனிப்பட்ட காரணங்களுக்காக நான் தலைமை நிதி அதிகாரி பணியிலிருந்து உடனடியாக ராஜினாமா செய்கிறேன் என்பதை இந்த கடிதத்தின் மூலம் உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் நிறுவனத்தில் பணிபுரிந்தது மிகுந்த மகிழ்ச்சியையும் சிறந்த அனுபவத்தையும் அளித்தது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.